Showing posts with label Ninnaye rathi endru ninaikkirenadi.... Show all posts
Showing posts with label Ninnaye rathi endru ninaikkirenadi.... Show all posts

Sunday, December 02, 2007

Ninaivugalin mulumaiyana parimaanam...

Well... lately have fallen in love with thamizh kavithaigal…(tamil poems)..

And a particular reason for that is, I stumbled on the following lines from a college mate of mine...Kanavugalin Kaadhali...

This love of mine is been now fed and getting nourished by poems of her…
This face of me is called as “Rasigan” – a literature buff .

Avaludaiya padaipugalil sila muthukal itho …


உனக்காக எழுதப்படும் கவிதைகளில்
உண்மை இருக்கிறதா - தெரியாது !
ஆனால் ...
காதல் இருக்கிறது ;)
========================

உனக்கான என் காதல் கவிதைகளில் ,
எனக்கு மிகவும் பிடித்தது..

நம் குழந்தை ;)
========================


என் கண்ணீர் + என் கவிதை = நீ !!!

நீ தப்பிச் செல்ல கூடாதென்று ,
மனத்தினில் மறைத்து வைத்தேன் ...
என்ன பிரயோஜனம் ...
பலநேரங்களில் ...கண்ணீராய் மாறி
விழிகளின் வழியாக வெளியேறி விடுகிறாய்...
சில நேரங்களில் ... கவிதையாய் ..!
========================

காதல் = சுவாசம் ???!!!

உன்னை நான் சந்திக்காமல் இருந்திருந்தால்...
சுவாசிக்காமல் உயிர் வாழும் வித்(ந்)தை மட்டும் அறிந்திருப்பேன் !

======================
வட்டப்பாதை
~~~~~~~
விலகலாம் என்றெண்ணி
எதிரெதிர் திசையில் பயணிக்க துவங்கினோம்....
அப்பொழுது நாம் அறிந்திருக்கவில்லை,
நாம் பயணிக்க போவது வட்டப்பாதையில் என்று..

======================

நெஞ்சில் மிச்சம் ...
~~~~~~~~~
கோப்பையில் மிஞ்சிய சில துளி தேனீர்...
சீப்பை ஜீவனாக்கிக் கொண்ட மயிர் கற்றைகள்...
ஜன்னல் கம்பியில் விளையாடும் துருப்பிடித்த மழை துளிகள்...
இவ்வாறு மிஞ்சிய விஷயங்களை பார்க்கும்போதெல்லாம்,
நெஞ்சில் எஞ்சிய உன் நினைவுகள்!

========================

டிக்...டிக்...டிக்...
உனக்கான நிமிடங்களையும்...
எனக்கான நிமிடங்களையும்....
நமக்கானதாக மாற்றுகிறது -
- காதல் கடிகாரம் ;)

=========================

வெட்கத்தைக் கேட்டால் நீ என்ன தருவாய்......?
காதலை !!!!!!!

========>Kanuvugalin Kaadhali<==========