இந்த முத்து சிதறல்களை என்னுடைய இணைய தளத்தில் வெளியிட அனுமதி அளித்த கனவுகளின் காதலிக்கு என் நன்றி.....
மழை துளிகள் மண்ணில் தங்குவதில்லை - அதற்காக
மழை பெய்யாமல் இருப்பதில்லை !
======================
காதலின் வெம்மையை விட - பிரிவின்
நிழல் சில நேரங்களில் மேலானது !
====================
நீ.. நான்.. காதல்..
தனியாக நடந்து கொண்டிருந்தேன் ...
ஒரு காலடிச் சத்தம் ...
திரும்பினால் ... நீ !
இருவரும் நடந்து கொண்டிருந்தோம்...
யாரோ நம்முடன் வருவது போல் உணர்தோம்..
அட - காதல் !
பின் மூவருமாக நடக்கத் துவங்கினோம்....!!!
=================
காதல் தீரும் பொழுது - கண்ணீரும்
தீர்ந்து போகும் !
=================
என் பேனா உனக்காக எழுத மறுக்கிறது...
ஒற்றை பார்வை சொல்லாத காதலையா ,
இத்தனை வார்த்தைகள் சொல்லிவிடக்கூடும் ...
======================
இயல்பாக நடக்கும் எல்லா விஷயங்களையும்
மனம் சமநிலையில் ஏற்றுகொள்வதில்லை.
உதாரணம் - நாம் விரும்பியதும் .. விலகியதும்.
####### My addition to this ##########
நாம் பார்த்ததும் -- விரும்பியதும்... விலகியதும் -- ஒரு புதிய காவியம்...
#################
====================
எத்தனை அவசரம்
உன் கண்களுக்கு ....
உனக்கு முன்பாக ,
உன் காதலைச் சொல்வதற்கு !
===================
நான் சரியாக செய்த தவறு -
உன்னை விரும்பியது !
======================
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment